நெகிழ்ச்சியான க்யூட் வீடியோ... பிறந்தநாள் கேக்கை தொட்டு கும்பிட்ட சிறுமி!
தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடும் அந்தச் சிறுமி, கேக்கை வெட்ட முன் கைகளை மடித்து, கேக் மேலே உள்ள மெழுகுவர்த்தியை தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறார். அந்த தருணத்தில் அருகில் அவருடைய பாட்டியும் அதேபோன்று செய்கிறார். நெகிழ்ச்சியான நிமிடங்கள், பாரம்பரியத்தின் அழகையும், குடும்பத்தின் உணர்வுமிக்க சூழலையும் மிக நையாண்டித்தனமாகப் பதிவு செய்கின்றன.
சமூக வலைதளங்களில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியிருக்கும்போது, பிறந்தநாள் மெழுகுவர்த்தி கூட ஒரு பிரார்த்தனையாக மாறி விடுகிறது” என ஒருவர் கருத்து பகிர, மற்றொருவர் “இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள குடும்பத்தின் மதிப்புகளும், வழிகாட்டும் பாட்டியும் தாத்தாவும் மிக முக்கியமான பாத்திரம் வகிக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
இத்தகைய வீடியோக்கள், பாரம்பரியம் மற்றும் நம் குடும்ப மதிப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவுபடுத்துகின்றன. “பிறந்தநாளில் கேக் வெட்டுவதற்கு முன்னர், சுடரின் முன் நன்றி கூறுவது.” இதுவே ஒரு கலாச்சாரத்தின் மையம். “தாத்தா-பாட்டியின் வளர்ப்பு என்பது குழந்தையின் மனதை மட்டுமல்ல, அதன் வாழ்கையைச் சீராக்குகிறது” என நெட்டிகன்கள் அழகாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, இனிய நினைவுகளின் அடையாளமாக ஒவ்வொருவரின் இதயத்திலும் நிலைத்து நிற்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
