உணவகத்தில் அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்... பெரும் பரபரப்பு!
சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து கோர விபத்து ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஓட்டல் ஊழியர் சரவணன் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென்று அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. ஓட்டலில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லைஇச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
