ரூ500க்கு சிலிண்டர்!! அதிரடி அறிவிப்பு!!

 
சிலிண்டர்

சத்தீஸ்கர் மாநிலத்தில்   காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்  ரஞ்சித் ரஞ்சன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும் போது இங்கு பல கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சியும் நேற்று ஸ்டீல் சிட்டி பிலாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Ranjeet Ranjan

அந்த கூட்டத்தில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். மேலும், அவர் தற்போது சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு ஆட்சியின் பணிகளைப் பாராட்டி பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தை போன்று சத்தீஸ்கரில் உள்ள இல்லத்தரசிகளுக்கும் ரூ.500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ரஞ்சன், மோடி அரசை குற்றஞ்சாட்டி, ஒன்றிய அரசு இந்து முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குகிறது என தெரிவித்தார். இது தவிர, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணமும் வரவில்லை என கண்டனம் தெரிவித்தார். ஒன்றிய அரசு இந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளது எனவும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது என்றும் பேசினார்.

Cylinder

ராஜஸ்தானில் மானிய விலை எரிவாயு சிலிண்டர் திட்டம் குறித்தும் ரஞ்சித் ரஞ்சன் பேசினார். காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியபோதெல்லாம் ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு சிலிண்டரில் மானியம் வழங்கவில்லை என்றார். சத்தீஸ்கரை பொறுத்த வரையில், ஒரு சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். விரைவில் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போவதாக ரஞ்சித் ரஞ்சன் கூறினார். மாநிலத்தில் உள்ள அமைப்பில் கோஷ்டி பூசல் குறித்த கேள்விக்கு, இருவரிடையே உள்ள கருத்து முரண் என்பது ஒட்டுமொத்தமான பிளவு இல்லை என்றார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web