செக் பண்ணிக்கோங்க... நாளை சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை ... அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்!

இன்றுடன் ஜூன் மாதம் முடிவடைகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் இதனையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, ஏசி விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலம் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜூலை 1ம் தேதி முதல் பான் கார்ட்டு மற்றும் ஆதார் இரண்டும் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைப்பதும் அவசியமாகிறது. இதற்கு, டிசம்பர் 31, 2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் மத்திய நேரடி வரி வாரியத்தால் இது செயல்படுத்தப்பட உள்ளது.
அதே போல் SBI கார்டு அதன் கிரெடிட் கார்டு ஹோல்டர்களுக்கு குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15, 2025 முதலில் இருந்து அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் UPI யில் ஜூன் 30 முதல் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளது அதன்படி, கூகுள் பே, ஃபோன் பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து UPI - அடிப்படையிலான ஆப்ஸ்களும் இனி பரிவர்த்தனைகளின் போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.
HDFC வங்கி அதன் கிரெடிட் கார்டு விதிகளில் ஜூலை 1 முதல் மாற்றம் அமலாகும். இந்த மாற்றத்தின்படி, கிரெடிட் கார்டு மூலம் கேமிங் செயலிகளில் ரூ.10,000 வரை செலவிடும் போது, அதற்கு தனியாக 1 சதவீதம் கட்டணமும், பேடிஎம், ஃப்ரீசார்ஜ் போன்ற செயலிகள் வழியாக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 1 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஜூலை மாதத்தில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுப்பதற்கும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்புகளுக்கும், விரைவான கோரிக்கை செயலாக்கத்திற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!