செம... வங்கி ஊழியர்களுக்கு 15.97% அகவிலைப்படி உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை !

 
bank

 வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது . 
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வங்கி ஊழியரின் அகவிலைப்படி  மே, ஜூன் மற்றும் ஜூலை  மாதங்களில் 15.97% ஆக இருக்கும். "பிரிவு 13 ன் அடிப்படையில் 08.03.2024 தேதியிட்ட 12வது இருதரப்பு தீர்வின்  படி  மே, ஜூன் மற்றும் ஜூலை 2024 மாதங்களில் பணியாளர்கள் மற்றும் அலுவலர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி விகிதம் 15.97% ஆகும்.  
வங்கிகளில் மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான  உறுதிப்படுத்தப்பட்ட அகில இந்திய சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு  பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!
ஜனவரி 2024 - 138.9
பிப்ரவரி 2024 - 139.2
மார்ச் 2024 - 138.9
இவைகளின்  சராசரி CPI 139 மற்றும் அதன்படி 123.03க்கு மேல் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 15.97.  கடைசி சராசரி காலாண்டு CPI 138.76 ஆகும். எனவே, மே, ஜூன் மற்றும் ஜூலை 2024 இல் 0.24 புள்ளிகள் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது.  2024 மார்ச் மாதம்   IBA மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17% வருடாந்திர ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டன. இதன் விளைவாக பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். நவம்பர் 2022 முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வால் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
அதிகாரிகளின் ஊதியத் திருத்தம் குறித்து  "பொதுத்துறை வங்கிகளின் ஸ்தாபனச் செலவுகளின் ஊதியச் சீட்டுக் கூறுகளின் செலவில் 17% ஆகும், இது மொத்த ஊதியத் திருத்தத்தின் படி அதாவது பே ஸ்லிப் படி  ரூ. 8,284 கோடிக்கும் அதிகமாகும். "

வங்கி

இது குறித்த அறிவிப்பில்  "சிஏஐஐபி  முடித்த அதிகாரிகள்  நவம்பர் 1, 2022 முதல் 2  அதிகரிப்புகளுக்குத் தகுதி பெறுவார்கள்." மேலும், "புதிய ஊதிய விகிதங்கள் ரூ. 48480/- முதல் ரூ.173860/- வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.  இது 01.11.2022 முதல் அமுலுக்கு வரும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்கள்  வேலை செய்ய வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.   இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் இந்த முன்மொழிவை ஒப்புக் கொண்டுள்ளன. இவை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. 
இது குறித்து மார்ச் 2024 ல் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில்  பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் 5 நாள் வேலை செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் எனத் தெரிகிறது.   கூட்டுக் குறிப்பு அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக  அங்கீகரித்துள்ளது.  
இந்திய ரிசர்வ் வங்கி   குறிப்பிட்ட குறைந்தபட்ச வேலை நேரம் மற்றும் வங்கிகள் கடைபிடிக்க வேண்டிய வாடிக்கையாளர் சேவை காலங்களை நிர்ணயித்துள்ளது.  மத்திய வங்கி வழங்கும் வழிகாட்டுதல், பொதுத்துறை நிறுவன வங்கிகள்  5 நாட்கள் வேலை வாரத்தை செயல்படுத்த முடியுமா என்பதை தீர்மானிக்கும்.  திருத்தப்பட்ட வேலை நேரம் அரசின் அறிவிப்பிற்குப் பிறகு அமலுக்கு வரும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web