அடக்கொடுமையே!! தக்காளியில் ஐஸ்கிரீம்.. வைரல் வீடியோ!!

 
ஐஸ்கிரீம்

கோடை காலம் வந்தாலே ஐஸ்கிரீம் விற்பனை சூடுபிடிக்கும். நகரில் உள்ள எளிய கடைகள் முதல் பெரியளவிலான ஐஸ்கிரீம் கடைகள் வரை கூட்டம் அலைமோதும். ஐஸ்கிரீம் வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி ,சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் என பல பிளேவர்களில் வருவதோடு. ஃபலூடா, ஸ்டிக்கி டாபி புடிங், செர்ரி வொயிட்சாக்லெட் கேரமல் பார் என வித்தியாச வித்யாசமான கலவைகளோடும் வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் ஒரு தெருவோர வியாபாரி ஒருவர் ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற புதுவிதமான ஐஸ்கிரீம் கலவையை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது சிலருக்கு பிடித்திருந்தாலும், பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதாவது ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற வித்யாசமான உணவு பலரது கவனத்தை பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கடும் பேசு பொருளாக மாறியுள்ளது.

@aapkabhai_foody என்கிற இன்ஸ்டாபயனர் பகிர்ந்திருந்த அந்த வீடியோவில், ஒரு தெருவோர வியாபாரி ஒருவர் குளிரூட்டப்பட்ட ஒரு ரெபிரிஜிரேட்டர் தவாயில் முதலில் வெட்டப்பட்ட தக்காளியை நசுக்குகிறார். பின்னர் அதனுடன் பாலுடன் கலந்த ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட் கலவை ஊற்றப்பட்டு, கலந்து ‘தக்காளி ஐஸ்கிரீம்’ தயாரிக்கப்படுகிறது. 

ஐஸ்கிரீம்

பின்னர் தக்காளியால் அலங்கரிக்கப்பட்டு ஒரு பவுலில் அழகாக பரிமாறப்படுவது போல் காட்டப்படுகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பல மோசமான கமெண்ட்களை பெற்று வைரலாகி வருகின்றது. ஆனால் சிலர் இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு சிறந்த சுவை எனவும் கமாண்ட் செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web