மே 18ம் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு... திருப்பதி தேவஸ்தானம்!

 
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

 திருப்பதியில் நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்கும் பொருட்டு 3  மாதங்களுக்கு முன்பே தரிசன டிக்கெட்கள் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கி விடுகிறது.அந்த வகையில் ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு  மே 18ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 
இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை இவைகளுக்கு 18ம்தேதி காலை 10 மணி முதல் தொடங்கி 20-ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். 

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
குலுக்கலில் தேர்தெடுக்கப்படுபவர்கள் ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 22  பிற்பகல்  12 மணி வரை முன்பணம் செலுத்தியவர்களுக்கு குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்ட டிக்கெட் வழங்கப்படும்.ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 17ம்தேதி வரை நடைபெறும் பவித்திர உற்சவத்திற்குரிய டிக்கெட் மே 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே போல் கல்யாண உற்சவம்  சேவைகளில் கலந்து கொள்ளாமல்  சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சூவல் சேவைகளுக்கான டிக்கெட் மே 21ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் மே 23 ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் டிக்கெட்  23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

திருப்பதி கோவில்


முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான  ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மே23ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும்.
ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மே24ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். திருமலை, திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய மே24ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை, திருப்பதியில் ஸ்ரீவாரி சேவா தன்னார்வ சேவைக்கு  மே 27ம்தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவைக்கு பிற்பகல் 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவைக்கு டிக்கெட்கள் பிற்பகல்  ஒரு மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web