தனியார் மருத்துவமனையில் கணவர் கண் முன்னே.. மகளைக் கொன்று, மனைவியும் தற்கொலை!

 
மருத்துவமனை

கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மகளை கொலைச் செய்து விட்டு மருத்துவமனையில் நோயாளியின் கண்முன்னே மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தில் ஹரி கிருஷ்ணன் (42) என்பவர் தனது மனைவி வெங்கட சுமலதா (34), மகள் கன்னியா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். அதே பகுதியில் ஹரி கிருஷ்ணன் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், ஹரி கிருஷ்ணனுக்கு மூளையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்து வந்தார். சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஹரி கிருஷ்ணனின் மனைவி வெங்கட சுமலதா (34), மகள் கன்னியா (12) ஆகியோர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர்.

கன்னியா

அதன்பிறகு, மருத்துவமனையில் அறையின் கதவு நீண்ட நேரம் பூட்டியிருந்ததாலும், தட்டியும் திறக்காததாலும் பிரசாத் மற்றும் வார்டு பாய் வெங்கடேஷ் இருவரும் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மகள் கன்னியா கழுத்தில் துப்பட்டா துணி இறுக்கமாகச் சுற்றி இருந்தது. வெங்கட சுமலதா மின்விசிறியில் துப்பட்டா துணியால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.  

கன்னியா

முதல்கட்ட விசாரணையில், ஹரி கிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், விரக்தியடைந்து மகளைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலைச் செய்துவிட்டு வெங்கட சுமலதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web