ரூ.300 கோடி சொத்தை ஆட்டையப்போட மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகள்.. விசாரணையில் வெளிவந்த உண்மை!

 
புருஷோத்தமன்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 82). கடந்த மாதம் 22ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ​​அவர் காரில் அடிபட்டு கொல்லப்படும் அதிர்ச்சி காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக, கொலை செய்யப்பட்ட புருசோத்தமன் மகன் பாக்டேயின் மனைவியும், நகரமைப்புத் துறை உதவி இயக்குநருமான அர்ச்சனா (53) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை பிடித்து விசாரணை நடத்தியில் பெரும் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட புருசோத்தமன் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்திருந்தார். அர்ச்சனா இந்த சொத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணினார். இதற்காக அவர் பயங்கரமாக திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, அவரது கணவரின் கார் டிரைவர் மற்றும் கூட்டாளிகள் 2 பேர் காரில் இருந்த மாமனாரை கொன்று  விபத்தாக சித்தரிக்க முயன்றது அம்பலமானது. போலீசார் கொலை வழக்கு என பதிவு செய்து அரசு அதிகாரி அர்ச்சனாவை கைது செய்தனர். தலைமறைவான டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web