ஐடிஐ வகுப்புகளில் சேர ஜூன் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 
குட் நியூஸ்! ஐடிஐ மாணவர்களே ! உங்க காட்டில் மழை தான்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. தற்போது மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜீன் 13-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஐடிஐ

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25-ம் ஆட்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைப்பேசி எண், இ-மெயில் முகவரி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட்அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (SMRV), நாகர்கோவில் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள உதவி மையம் மூலமாகவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கோணம், நாகர்கோவில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டுமே. டெபிட் கார்டு, ஜிபே அல்லது நெட் பேக்கிங் மூலம் செலுத்தலாம்.

ஐடிஐ

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, இலவச பேருந்து பயண அட்டை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web