ஐடிஐ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 
குட் நியூஸ்! ஐடிஐ மாணவர்களே ! உங்க காட்டில் மழை தான்!

 தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு  வருகின்றன.அந்த வகையில் 2024 – 2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.   தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி அதிகாரப்பூர்வ இணையதளமான  www.skilltraining.tn.gov.in  மூலம் மே 10ம் தேதி முதல்  பெறப்பட்டு வருகிறது.

ஐடிஐ
விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி  ஜூன் 7ம் தேதி இன்றுடன்   நிறைவடைவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 13ம் தேதி  வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் itiadmission2024@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் 9499055689 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web