பாதுகாப்பு படையினர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு.. 4 பயங்கரவாதிகள், 2 வீரர்கள் பலி!

 
ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதேபோல் மற்றொரு பகுதியில் நடந்த என்கவுன்டரில் ஒரு பாதுகாப்பு படை வீரர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web