அடுத்தடுத்து சோகம்... பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
குவாடர்

இந்தியாவை மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருப்பதைப் போல பாகிஸ்தானை நான்கு புறமும் வன்முறை சூழ்ந்திருக்கிறது. நேற்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து குவாடர் காவல் நிலைய அதிகாரி மொஹ்சின் அலி கூறியதாவது:  பலுசிஸ்தான் மாகாணத்தின் சுர்பந்தர் பகுதியில் உள்ள குவாடர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குவாடர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவத்தில் காயமடைந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிங் ஷாப்பில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

குவாடரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் பூட்டி கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் ஜியா உல்லா லங்காவ் கூறியதாவது: தொழிலாளர்களை கொல்வது கோழைத்தனமான செயல். தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web