கோவிஷீல்ட் தடுப்பூசியால் மரணம்... பாதிப்புகள்... நாடு முழுவதும் அதிகரிக்கும் வழக்குப்பதிவு!
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நிரந்தர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வது அதிகரித்து வருகிறது. தனது 18 வயது மகள் ரித்தாய்கா, 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில், கட்டிடக்கலைப் பிரிவில் முதலாமாண்டு இளங்கலைப் பிரிவில் படித்து வந்தாள். கடந்த 2021ம் ஆண்டு கோவிஷீல்டு முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், அடுத்த 2 வாரங்களில் ரத்தம் உறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறாள் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மீது, ரித்தாய்காவின் பெற்றோர்கள், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Parents of the woman who allegedly died after taking Covishield have decided to file a case against Serum Institute of India (SII), a day after AstraZeneca, which sold the vaccine in India, admitted in court that their Covid shot can cause a rare side effect. @nabilajamal_ tells… pic.twitter.com/pb7RqGOuUs
— IndiaToday (@IndiaToday) May 1, 2024
ரத்தம் உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை கோவிட் தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று இந்த தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரும் போக்கு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நீதிமன்றத்தில் நிறுவனம் ஒப்புக்கொள்வதற்கு முன்பே நிறுவனத்தின் மீது கோவிஷீல்டு தொடர்பான வழக்குகள் நடைப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உலகளவில் கோவிஷீல்டு மற்றும் வேக்ஸிவ்ரியா போன்ற பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18 வயதான ரித்தாய்கா எனும் மாணவி, தனது முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரே வாரத்தில் ரிதாய்காவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரிதாய்காவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அவருடைய மூளையில் பல இரத்த உறைவுகளும், இரத்தப்போக்கும் இருந்தது தெரிய வந்தது. அடுத்த இரண்டே வாரங்களில் சிகிச்சைப் பலனளிக்காமல் ரித்தாய்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
ரித்தாய்காவின் இறப்புக்கான சரியான காரணம் அப்போது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. பின்னர் கடந்த டிசம்பர் 2021ல் ஆர்டிஐ மூலம், தங்களது மகள் ரிதாய்கா த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டு, தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான எதிர்வினை காரணமாக உயிரிழந்தார் என்பதை அவரது பெற்றோர் தெரிந்து கொண்டனர்.
இதே போன்ற வேறொரு சம்பவத்தில், தனது மகள் காருண்யாவும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதத்தில் கடந்த ஜூலை 2021ல் உயிரிழந்துள்ளார் என்று காருண்யாவின் தந்தை வேணுகோபால் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், மாணவி காருண்யாவின் மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டது என்று முடிவு செய்ய போதுமான ஆதாரம் இல்லை என்று அப்போது தேசியக் குழு முடிவு செய்தது.
பல குடும்பங்கள், நீதிமன்றப் புகாரின் மூலம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பேரழிவு தரக்கூடிய பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 2021ல் அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னர், தான் நிரந்தரமாக மூளைக் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேமி ஸ்காட் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதன் செயல்திறனைக் காட்டினாலும், அரிதான பக்க விளைவுகள் தோன்றுவது ஒழுங்குமுறை ஆய்வு மற்றும் சட்ட நடவடிக்கையைத் எதிர்நோக்கியிருக்கிறது.
சட்ட நடவடிக்கைகள் வெளிவரும்போது, பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நியாயமான இழப்பீடுகளையும், தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிறுவனத்தின் ஒப்புதலையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
