மன்மோகன் சிங் மறைவு... 7 நாட்கள் துக்கம்.. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து!

 
மன்மோகன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை டிசம்பர் 26ம் தேதி இரவு 10 மணிக்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை  முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  7 நாட்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இன்று டிசம்பர் 27ம் தேதி   திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

மன்மோகன் சிங்

மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டம் நடத்தப்படும். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், காங்கிரஸ் தொடக்க தின விழா உட்பட அக்கட்சி சாா்பில் அடுத்த 7 நாட்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web