திரும்பும் திசையெங்கும் மரண ஓலம்... குவியல் குவியலாய் சடலங்கள்...ஆப்கன் நிலநடுக்கத்தால் 1,450ஐ கடந்த பலி எண்ணிக்கை!

 
ஆப்கன் நிலநடுக்கம்


 

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பல கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டன. குறிப்பாக ஆகஸ்ட் 31ம் தேதி குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  6,782 வீடுகள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன்படி  தற்போது வரை 1,457 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயம் அடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைய மிகவும் கடினமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதே நேரத்தில் மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கன் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசை ரஷியா மட்டுமே தற்போது வரை அங்கீகரித்துள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய, ஜப்பான், ஈரான் மற்றும் துருக்கி   நாடுகள் நிவாரணப் பொருள்களை அனுப்பியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?