கதறும் மக்கள்... பெரும் சோகம்... பிரேசில் கனமழைக்கு 85 பேர் உயிரிழப்பு... 1,50,000 பேர் வீடு இழந்து தவிப்பு!

 
பிரேசில்

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அலெக்ரேவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வெள்ளத்தில் மூழ்கிய நகர மையத்தை ட்ரோன் காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. 150,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து என இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. பிரேசில் நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ரியோ கிராண்டே டோ சுலுக்கு தனது அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் உள்ளூர் அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகள் குறித்து விவாதித்தார்.

தன்னார்வலர்கள் படகுகள், ஜெட் ஸ்கிஸ் ஆகியோர் தொடர்ந்து மீட்பு முயற்சிகளில் பங்கேற்று உதவி வருகின்றனர். எந்த தெருவில் நுழைந்தாலும், நாம் கேட்கும் ஒரே விஷயம் 'உதவி,' 'உதவி'," என்பதாக தான் இருக்கிறது. எங்கள் மக்கள் அத்தனை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று மீட்பு குழுவில் இருந்தவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

மாநில சிவில் பாதுகாப்பு அதிகாரத்தின் படி, இது வரை 205 பேர் காணாமல் போயுள்ளதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் இதுவரை 85 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசில்

வெள்ளத்தால் பல நகரங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மழையினால் நிலச்சரிவுகள் மற்றும் நீர்மின் நிலையத்தின் அணை பகுதியும் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. கனமழை பெய்ய துவங்கியதுமே சுமார்  4,00,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். அதே போன்று மாநிலத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்டோ அலெக்ரேவில், குய்பா ஏரி அதன் கரையை உடைத்து, பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த நீர் மட்டத்தைத் தாக்கியது என்று தேசிய புவியியல் சேவை தெரிவித்துள்ளது. போர்டோ அலெக்ரேயின் சர்வதேச விமான நிலையம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளது. இதுவரை நிலைமை சீராகவில்லை.

பிரேசில்

போர்டோ அலெக்ரேவில் தற்காலிக மீட்பு மையம் ஒன்றில், கெய்லி மோரேஸ் தனது கணவர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் தண்ணீர் தங்கள் வீட்டின் இரண்டாவது தளத்தை அடைந்த போது மீட்பு குழுவினர் தங்களை மீட்கப்பட்டதாக விவரித்தார்.  கடந்த செப்டம்பரில் இது போன்றதொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு நவம்பரில், இப்போது இந்த மே மாதம் இப்படி நிகழ்ந்துள்ளது. இது இன்னும் மோசமாகி வருகிறது என்று மக்கள் கதறுகின்றனர். 

வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்கள் மத்தியில் வாராந்திர உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ், ரியோ கிராண்டே டோ சுல் நகர மக்களுக்காக தாம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web