தோண்ட தோண்ட சடலங்கள்... ஆப்கன் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு.!
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 31ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல வீடுகள் இடிந்து, கிராமங்கள் அழிந்தன, மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன்படி 3,640 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தொடங்கிய அடுத்த நாளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மழை காரணமாக பல பகுதிகளை அடைவது கடினமாக உள்ளது. தலிபான் அரசு மற்றும் ஐ.நா. அமைப்புகள் உதவி கோரியுள்ளன. இந்தியா, ஈரான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

ஆனால் அந்த உதவி அளவு போதுமானதாக இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடி, வறட்சி மற்றும் அண்டை நாடுகளிலிருந்து அகதிகள் திரும்புதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், இந்தப் பேரழிவு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
