பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு... ரூ.3 லட்சம் நிவாரண தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
முதல்வர் ஸ்டாலின்

இன்று அதிகாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இன்று அங்கு காலை ஒரு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தியேட்டருக்குள் பட்டாசு

மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர். அத்துடன் பட்டாசு ஆலைக்குள் யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஸ்டாலின்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் திரு. ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடி  திரு. மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை  திரு. செல்வகுமார் (வயது 35) மற்றும் திரு. மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களும், ஆறுதல்களும். அத்துடன்  உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு தலா ரூ3,00,000  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web