கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!
மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே மோசமான வானிலை காரணமாக அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சி செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மோசமான பனிமூட்டம் காரணமாக அவசரமாக தரையிறக்க முயற்சிக்கையில் வெடித்துச் சிதறியது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், விபத்தைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்நிலையில் விமான விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
