தீபாவளி கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் குவிப்பு!

 
தீபாவளி போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18,000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குவிந்து வருகின்றனர். சென்னை பெருநகர். காவல்துறை சார்பில் பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி

அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பொது' மக்கள் அதிகளவு கூடும் இடங்களான பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை காவல்துறை சார்பில் பலவேறு சிறப்பு பாதுகாப்பு ஏம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி பர்ச்சேஸ்! மக்கள் வெள்ளத்தில் தடுமாறும் கடை வீதிகள்!

இந்நிலையில், பாதுகாப்பு பணியில் சென்னையில்ல் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு தி.நகர், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும், போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய 4 இடங்களிலும் போலீசார் 19 ஒலிப்பெருக்கிகள் மூலமாக திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியபடியும், தங்கள் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு வழங்கியபடியும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web