தீபாவளி கொண்டாட்டம்... ஆம்னி பேருந்துகளில் 30 சதவீதம் கட்டணம் குறைப்பு! அமைச்சர் சிவசங்கர் தகவல்!
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு குட் நியூஸ். ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி என தொலைத்தூரத்திற்கு பயணம் செய்பவர்கள் விசேஷ விடுமுறை தினங்களில் பேருந்து கட்டணம் ரூ.5,000 வரையில் கூட்ட நெரிசலைப் பொறுத்து ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். "சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும், மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!