நவ.8 முதல் திருநெல்வேலி வரை தீபாவளி சிறப்பு ரயில்கள்... முன்பதிவுக்கு முந்துங்க!

 
ரயில்

தீபாவளிக்கு ரயில் முன்பதிவு துவங்கிய சில நொடிகளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதில் பலரும் விழி பிதுங்கி வழி தெரியாமல் தவிக்கின்றனர். என்ன தான் சொகுசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அரசு கட்டண விகிதங்களில் வரைமுறைப்படுத்தி கண்காணித்தாலும், விடுமுறை நாட்களில் ரூ.3,000த்தில் துவங்கி ரூ.5,000 வரை பேருந்துக்கேற்பவும், விடுமுறை நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வசூலிக்கிறார்கள்.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

இந்நிலையில், பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை – திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி   சென்னை – திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில்
இந்த சிறப்பு ரயில்  சென்னை-நெல்லை இடையே நவம்பர் 8, 15, 22   தேதிகளில்  இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு  திருநெல்வேலிக்கு  சென்றடையும். மறுமார்க்கமாக நவம்பர்  9, 16, 23  தேதிகளில் நெல்லையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், வழியாக செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web