நாய்கள் துரத்திதுரத்தி கடித்ததில் மான் பலி!

 
மான்

 கரூர் மாவட்டத்தில் அண்ணா நகரில் தனியார் நிறுவனத்தில்  குடோன் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில்  இன்று காலை 8 மணிக்கு ஒரு புள்ளி மானை நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன.  அந்த மான் நாய்களிடம் இருந்து தப்பிக்க டெக்ஸ்டைல்ஸ் குடோனுக்குள்  பதுங்கி கொண்டது. இதை கண்ட அப்பகுதியினர் நாயை விரட்டி விட்டனர்.  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததில் உடனடியாக வந்து சேர்ந்தனர்.

மான்
வனச்சரகர் தலைமையில் வனத்துறை குழுவினர் விரைந்து வந்து வலைவீசி மானை பிடித்தனர். மானின் உடல் முழுவதும் சிராய்ப்புகளும், காயங்களும் இருந்ததில் மான் துவண்டு விட்டது.  பிடிபட்ட மானை கரூர்  கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  மானை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் வரும் வழியிலேயே மான் உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வனச்சரகர் தண்டபாணி  இந்த மான் ஒரே இடத்தில்  அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் இனத்தை  சேர்ந்தது. பருவமழை இல்லாததாலும், கடும் கோடை வெயிலாலும் வனப் பகுதியில் வன விலங்குகளுக்கு  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  கரூரை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்திருக்கலாம். அப்போது நாய்கள் துரத்தியதில் இந்த குடோனுக்குள் வந்து மாட்டிக்கொண்டது எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web