ரெமல் புயல் உருவாவதில் தாமதம்... மிரட்ட வரும் கனமழை!

 
ரெமல் புயல்

 இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு மிக விரைவாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில்  புயலாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது இது புயலாக மாறுவதில், தாமதமாகலாம் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெறலாம் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

புயல்
ரீமால் புயல்  நாளை காலைக்குள் வடமேற்கு, அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறலாம் எனத் தெரிகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று இரவு தீவிரப் புயலாக மாறும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் நாளை நள்ளிரவில் சாகர் தீவு - கேபுபாரா இடையே வங்கதேசம், மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரைகளை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 -120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!