டெல்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தோருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. முதல்வர் உத்தரவு!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில், அப்பாவி உயிர்கள் பலியானது அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி

சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகள் மனதை உடைத்துள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த பயங்கரச் சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு புதிய சவாலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி குண்டு

அதே போன்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். ஃபரிதாபாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் 300 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் மற்றும் ஏகே–47 ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்திருப்பது தற்போதைய நிலைமை தீவிரத்தைக் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!