அதிர்ச்சி.. ரிஷப் பந்த்திற்கு ரூ30,00,000 அபராதம்... ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா டெல்லி கேப்பிடல்ஸ்?

 
ரிஷப்பந்த்
 

17வது ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. இந்தப் போட்டி  அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 7ம் தேதி நடைபெற்றது.இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  221 ரன்கள் சேர்த்தது. அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் போராடி   தோல்வி அடைந்தது.

டெல்லி

இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு ரூ30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 10 நிமிடங்கள் தாமதமாக டெல்லி அணி தனது கடைசி ஓவரை வீசியது.  அதனால் நடப்பு சீசனில் டெல்லி அணிக்கு விதிக்கப்படும் 3 வது அபராதம் இதுவாகும்.  இவர்களுக்கு போட்டியின் ஒரு நாள் ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அல்லது ரூ12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேட்ச் ரெஃப்ரியின் முடிவுக்கு எதிராக டெல்லி அணி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

பெங்களூரு
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  பிசிசிஐ அதிகாரி, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது, அதற்கு அனைத்து அணிகளும் கட்டுப்பட வேண்டும் என தெரிவித்துவிட்டார். அடுத்ததாக மே 12ம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாட உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்  பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற  இந்த போட்டியில்  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் இந்த போட்டியில் பந்த் விளையாட வாய்ப்பில்லை.  டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதே போல் பெங்களூரு அணியும்  பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த போட்டியில்  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை, ஹைதராபாத் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல மும்மூரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web