டெல்லி கார் வெடிப்பு... குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீஸ்!

 
டெல்லி

டெல்லியின் செங்கோட்டை பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்த நேரத்தில் 10ஆம் தேதி இரவு கார் வெடித்து சிதறியதும், 13 பேர் உயிரிழந்தது மற்றும் 27 பேர் காயமடைந்தது தேசியத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலாகும் என தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. கார் வெடிப்பை நிகழ்த்தியவர் டாக்டர் உமர் முகமது என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி என்பதும் டி.என்.ஏ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

டெல்லி

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் கடந்த சில வாரங்களில் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் இருந்து கைது செய்யப்பட்ட டாக்டர் அதீலின் சகோதரர் டாக்டர் முசாபர் இந்த பயங்கரவாதக் குழுவின் முக்கிய திட்டமிடுபவர்களில் ஒருவராக புலனாய்வில் தெரியவந்துள்ளது. இவர் 2021ஆம் ஆண்டு துருக்கியில் டாக்டர் முசம்மில் மற்றும் கார் வெடிப்பை நடத்திய உமருடன் சேர்ந்து தாக்குதல் தொடர்பான சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி

காஷ்மீரைச் சேர்ந்த முசாபர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளிநாட்டில் தங்கியிருப்பது தெரிகிறது. முதலில் துபாயில் இருந்த அவர் தற்போது ஆப்கானிஸ்தானில் ஒளிந்திருக்கலாம் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். கார் வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டதால், அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை காஷ்மீர் போலீசார் நாடியுள்ளனர். அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடும் பணிகள் நடைமுறையில் உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!