டெல்லி கார் வீடியோ வெளியீடு.. .7.02 மணிக்குள் நொடிகளில் நேர்ந்த கொடூரம்!
தலைநகரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெடிப்பின் நேரமும், தாக்கத்தையும் தெளிவாகக் காட்டும் இந்த சிசிடிவி காட்சி தற்போது பரவலாக பரவி வருகிறது.
நேற்று மாலை துல்லியமாக 7.02 மணிக்கு கார் திடீரென வெடித்ததாக காட்சியில் பதிவாகியுள்ளது. சில விநாடிகளுக்குள் பரபரப்பு உருவாகி, பெரிய தீப்பிழம்பு எழுந்து சுற்றுப்புறம் முழுவதும் புகை மூட்டம் பரவியது. மக்கள் அச்சத்துடன் ஓடி தப்பிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.
#WATCH | Delhi | CCTV footage shows explosion from car blast near the Red Fort yesterday. Eight people lost their lives in the incident.
— ANI (@ANI) November 11, 2025
(Video source: President of Chandni Chowk Vyapar Mandal) pic.twitter.com/aVLqQM0BgH
இந்த கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவவாரியங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் திட்டமிட்ட செயல் என சந்தேகப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பு முகமைகள் இணைந்து விசாரணை நடத்துகின்றன. உளவுத்துறை தகவல்கள் சேகரிக்கும் பணி, சிசிடிவி காட்சிகள் ஆய்வு, சம்பவ இட சுற்றுவட்டாரத்தில் விசாரணை உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
