டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும்.. இடிந்து விழுந்த ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை!

 
ராஜ்கோட்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குஜராத்தில் பெய்த கனமழையின் போது ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
டெல்லியில் நேற்று பெய்த கனமழையின் போது டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1 இன் மேற்கூரை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தார்.


5 பேர் காயமடைந்தனர். மேற்கூரை ஷீட் தவிர, ஆதரவுத் தூண்களும் இடிந்து விழுந்ததால், முனையத்தின் பிக் அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் மேற்கூரையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காக பராமரிப்பு பணியின் போது மேற்கூரை உடைந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


காங்கிரஸ் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், "மூன்று நாட்களில் மூன்று விபத்துகள். ராஜ்கோட் விபத்து வளர்ச்சி என்றால் என்ன என்பதைக் காட்டியது. இதற்கு பிரதமர்தான் காரணம். இது தொடங்கப்பட்ட ஒரு வருடத்தில் நடந்துள்ளது. ஜூன் 27 ஜபல்பூர், ஜூன் 28 டெல்லி, ஜூன் 29 ராஜ்கோட் இதுதான் பிரதமர் மோடியின் 'ஹாட்ரிக்' வெற்றி. குஜராத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையமான ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி ஜூலை 27, 2023 அன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web