இன்று டெல்லி , பஞ்சாப் முதல்வர்கள் சென்னை வருகை!!

 
டெல்லி , பஞ்சாப்

தலைநகர் டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லி மாநில அரசு அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டி வருகிறது. பெரும்பான்மை பலத்துடன் இந்த சட்டத்தை திரும்ப பெற வைக்க வேண்டும் என்பதே டெல்லி மாநில அரசின் முடிவு . இதற்காக ஆதரவு திரட்டும் வகையில் இந்தியா முழுவதும் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான ஆட்சி அமைந்திருக்கும் மாநிலங்களில் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வரிசையில் இன்று தமிழகம் வருகிறார். 

டெல்லி , பஞ்சாப்

டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர்  பகவந்த் மான் இருவரும் இன்று மாலை சென்னையில் தமிழ்நாடு முதல்வரை  சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அர்விந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி  வருகிறார். அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சென்னையில் சந்தித்து பேச இருக்கிறார்.  

டெல்லி , பஞ்சாப்

இதற்காக டெல்லி முதல்வர்  அர்விந்த் கெஜ்ரிவால் தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அர்விந்த் கெஜ்ரிவால் தலைமை செயலகம் சென்று முதல்வரை சந்திக்க இருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வரவுள்ளார். மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் உள்ள நிலையில், தமிழக முதல்வரிடம் ஆதரவு கோரி  வருகிறார். மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் டெல்லி முதல்வர், இன்று தமிழக முதல்வரை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web