டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு... 13 பேர் பலி; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

 
மோடி
 

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை மாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. மாலை 6.52 மணியளவில் மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நொடிகளில் அந்த கார் வெடித்து சிதறி, சுற்றுப்புறம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடிப்பின் சத்தம் பல மீட்டர் தொலைவிலும் கேட்க, புகை வான்வரை பரவியது. அருகிலுள்ள சாந்தினி சவுக் சந்தை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் ஓடினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ, கார் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. வெடிப்பின் தாக்கத்தில் கார் பாகங்களும், மனித உடல்களும் சிதறியிருந்தன. இந்த பரிதாபகரமான விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; மேலும் 20-க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூடானில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நேராக லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார். ஒவ்வொருவருடனும் தனியாக பேசிய அவர், ஆறுதல் கூறி விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அமைதியாக சென்ற பிரதமர், மருத்துவர்களிடமும் சம்பவம் குறித்த விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இதைத் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், “இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!