உஷார்... தமிழகம் முழுவதும் 1006 பேருக்கு டெங்கு.. நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... !!

 
டெங்கு

மழைக் காலம் தொடங்கும் முன்பாகவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுவன் பலியான நிலையில் புதுச்சேரியில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. 

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தமிழ்நாட்டில் டெங்கு, ப்ளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வரும் காலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை உட்பட பல பகுதிகளில், டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சலில் அக்டோபர் மாதத்தில், 100-க்கும் மேற்பட்டோரும், சிக்குன் குனியாவில், 25-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுதும் டெங்கு காய்ச்சலில், இம்மாதத்தில் மட்டும் 1,006 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தாண்டில் இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டு; 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது, தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், பாதிப்பு வந்த பின், உயிரிழப்பு ஏற்படகூடாது என்பதில், மிக கவனமாக பணியாற்றி வருகிறோம். ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், குணமாகும் வரை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
 டெங்கு
நகரங்களில் வீடு வீடாகவும், கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு வருவோரின் விபரங்களையும் சேகரித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர், தன்னிச்சையாக எவ்வகை மருந்தையும் உட்கொள்ளாமல், டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றால், தீவிர பாதிப்பையும், உயிரிழப்பையும் தடுக்கலாம் என்று கூறினார்

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web