பொய் பிரச்சாரம் மூலம் என் தலைக்கு ரூ10 லட்சம் விலை பேசினார்கள்... துணை முதல்வர் உதயநிதி பேச்சு!
சென்னையில் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை வகுப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் உள்ள “பாசிச கும்பல்” பொய் செய்திகளை பரப்புவதையே முழுநேர வேலையாக செய்து வருவதாக கூறினார்.
இந்தப் பயிற்சி பட்டறை, திமுக இளைஞரணி சார்பில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசியதை மேற்கோள் காட்டி, “நான் அப்போது, ‘பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும்’ எனப் பேசினேன். எனது பேச்சை திரித்து, நான் இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய் செய்திகளை பரப்பினார்கள்.
நான் சொல்லாதவற்றை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி கிளப்பினார்கள். இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சிலர் அவரது தலைக்கு விலை வைத்து, ஒரு சாமியார் ரூ.10 லட்சமும், மற்றொரு சாமியார் ரூ.1 கோடியும் தருவதாக அறிவித்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால், நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் வழக்கை எதிர்கொள்வேன்,” என கூறியுள்ளார். “பாசிச கும்பல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்புவதையே தங்கள் முழுநேர வேலையாக செய்கிறார்கள். இதற்கு எதிராக, நாம் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுகவின் கொள்கைகளையும், மக்களுக்காக செய்யப்படும் திட்டங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்,” எனக் கூறினார்.
தமிழ்நாடு அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, இளைஞரணி உறுப்பினர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில், உதயநிதி, சமூக ஊடகங்களின் நன்மைகளையும், அதன் மூலம் எழும் சவால்களையும் விரிவாக எடுத்துரைத்தார். “சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவி. ஆனால், இதை தவறாக பயன்படுத்துவோர், சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராக, நாம் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தமிழ்நாட்டில் நாம் செய்யும் நல்ல திட்டங்களை, மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி பட்டறை, திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தி உண்மையை பரப்புவதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
