இன்று இரவு திருச்சி செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 
சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!

இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அன்பில் மகேஷ்

இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக.செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். நாளை ஜூலை 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

உதயநிதி

இதில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?