தடம் புரண்ட மின்சார ரயில்!! சென்னையில் பரபரப்பு!!

 
தடம் புரண்ட ரயில்

ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்பிறகு இந்தியா முழுவதும் ரயில் சிக்னல் அறைகளை கண்காணிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன இரட்டை பூட்டு முறையை செயல்படுத்த இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ரயில்

ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் பிறகு தடம் புரண்ட ரயில், ரயிலை கவிழ்க்க சதி என தொடர் விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனை கவனித்த   ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.  

ஒடிசா

உடனடியாக ரயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு   சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.  உடனடியாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை .   மின்சார ரயில் தடம் புரண்ட சம்பவம் சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.   இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது குறிப்பிடதக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web