பக்தர் படியேறி சென்ற போது மூச்சுத்திணறி பலி... வெள்ளியங்கிரியை தொடர்ந்து திருத்தணியில் சோகம்!

 
திருத்தணி

 திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று.  இன்று கிருத்திகை தினம் என்பதால்  வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகம். தமிழகம் வெளிமாநிலங்கள்,மாவட்டங்களில் இருந்து  பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர்.  இதனால் மலைக்கோயில் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரிசையில் திரண்டு காத்திருந்தனர்.  சென்னை அருகில் உள்ள சோழவரத்தைச் சேர்ந்த முத்து   தனது மனைவி ராதிகா மற்றும் உறவினர்களுடன் தனது 2  மகன்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வேனில் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்தார்.

திருத்தணி

அவர் முருகன் மலைக்கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனத்திற்கு நடந்தே சென்றார். படி ஏறும் போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்தால் உடனடியாக அருகில் இருந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு  தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில்  ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  

ஆம்புலன்ஸ்

மேலும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அதனை  மருத்துவர்கள் உறுதி செய்தனர். உயிரிழந்த  முத்துவின் உடலை சோழவாரத்திற்கு  உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web