இன்று வரை சதுரகிரியில் மலையேற பக்தர்கள் அனுமதி... அமாவாசையில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
சதுரகிரி

சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களை முன்னிட்டு கடந்த ஜூலை 3ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று ஆனி மாத அமாவாசை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் சதுரகிரி மலையில் ஏறி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரிகிரி  மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஆனி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களை முன்னிட்டு ஜூலை 3ம் தேதி முதல் இன்று ஜூலை 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு  ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!
அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக இன்று ஜூலை 6ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கில் பக்தர்கள்  குவிந்து தரிசனம் செய்தனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web