நாளை முதல் 4 நாட்களுக்கு மலையேறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

நாளை ஜூலை 1ம் தேதி முதல் சதுரகிரி மலையேறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  சதுரகிரி மலையின் மீது பிரசித்தி பெற்ற சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தரமகாலிங்கம் ஆலயங்கள் அமைந்துள்ளது.

இந்த ஆலயங்களில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் வெகு சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள்  பிற மாவட்டங்களில் இருந்தும் சதுரகிரியில் கூடி, மலையேறி சாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு மலையேறி இறைவனை வழிபட்டு திரும்பினால் வடமாநிலங்களில் அமைந்துள்ள அமர்நாத், கேதார்நாத் யாத்திரை சென்று வந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்மீக அன்பர்களின் வாக்கு.  இதனால் சமீபகாலமாக சதுரகிரியில் அமாவாசை, பெளர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

சதுரகிரி மலை நேர்குத்தாக இருப்பதால் நல்ல உடல் வலிமையும், மனவலிமையும் இருப்பவர்கள் மட்டுமே மலையேற முடியும். இந்நிலையில், நாளை ஜூலை 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாத பிரதோஷம் வருகிறது. அதோ போன்று ஜூலை 3ம் தேதி ஆனி மாத பௌர்ணமி தினமும் வருவதால், நாளை முதல் ஜூலை 4ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சதுரகிரி மலைக்குச் சென்று வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

அதே சமயம் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தரிசனம் செய்ய பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சதுரகிரி

மலையேறி செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க அனுமதி கிடையாது. இரவு நேரத்தில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகளையும்  வனத்துறை விதித்துள்ளது.  

இம்மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் தேவைக்காக குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு பொருட்கள் என பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web