உடலில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!

 
கத்தி

 கடலூர்  மாவட்டம் சௌடல் பர்வதவர்த்தினி சமேத ராமனாதீஸ்வர சவுடாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் அம்மன் பண்டிகை உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.இதற்காக கோவிலில் இருந்து  புறப்பட்ட சக்தி கலசம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடையும்.  இதற்காக விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கத்தி

அத்துடன் இரவு ஜோதி தரிசனம் மற்றும் மகா தீபாராதனையிலும்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. அத்துடன்  நிர்வாக அறங்காவலர் ஜெயபாலன் நெடுஞ்செழியன் அழகேசன் நாட்டாமைகள் பாண்டியராஜ் சற்குணம், தாமோதரன் , அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web