ஆனி மாத பூஜைக்காக சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!
நேற்று ஜூலை 16ம் தேதி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், ஆனி மாத தரிசனத்திற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். ஒவ்வொரு மாதமும், மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதற்காக 11ம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13ம் தேதி இரவு சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

இன்று ஜூலை 17ம் தேதி முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஜூலை 21ம் தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
