திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள்... அலகு குத்தி, காவடி எடுத்து சாமி தரிசனம்!

 
வேல்
 இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முதலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் நாழி கிணற்றில் நீராடி முருகனை தரிசித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் காவடி

வைகாசி விசாக திருநாளான இன்று அதிகாலை 1.30 மணிக்கு திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனம் நடைப்பெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்ற நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் விதவிதமான காவடிகளை சுமந்து வந்து முருகனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள். இன்று காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனை நடைபெறுகிறது.  

திருச்செந்தூர் முருகன் காவடி

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம், இளநீர் காவடி, பூ காவடி, பறவை காவடி என விதவிதமான காவடிகளை சுமந்து சென்று முருகனை தரிசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்திச் சென்று முருகனை தரிசித்து அருள் பெறுகின்றனர். தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகளில் மட்டுமல்லாமல் பிற முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!