‘குபேரா’ வசூல் குஷியில் தனுஷ்... 5 நாட்களில் 100 கோடியை எட்டியது!

 
குபேரா தனுஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்  இவரது  ராயன் மற்றும் குபேரா படங்களின்  மூலம் தொடர்ந்து 2 வது முறையாக உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளார். இதில் ராயன் திரைப்படம் 2024  ஜூலை மாதம் 26ல் வெளியாகி, இந்தியாவில் 110 கோடி  உலகளவில் 149 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது. வழக்கமாக விஜய், ரஜினிகாந்த், அஜித்  படங்களுக்குத் தான் இத்தனை வசூல்.  

தனுஷ்

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷிற்கு குபேரா திரைப்படம்  ஜூன் 20ம் தேதி வெளியானது. முதல் ஐந்து நாட்களில் உலகளவில் 95.13 கோடி ரூபாய் வசூல் செய்தது.  தற்போது 100 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தனுஷ்

குபேரா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமே தனுஷின் தனித்துவமான நடிப்பு, சேகர் கம்முலாவின் இயக்கம் எனக் கூறுகின்றனர்.  படத்தில் அவர் சிறப்பாக நடித்து முழு படத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து சென்றார்.  குபேரா திரைப்படம் மொத்தமாகவே 120 கோடிகள் வரை செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஏற்கனவே, படம் 100 கோடி வசூல் செய்துவிட்ட நிலையில், விரைவில் பட்ஜெட் தொகையை மீட்டு எடுத்துவிடும் எனவும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது