தனுஷீன் ‘குபேரா’ படம்... நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வெளியீடு!

 
ராஷ்மிகா

‘குபேரா’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் பார்வை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. 

சேகர் கமுல்லா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.  


தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் நாகர்ஜூனாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் தோற்றத்தில் தனுஷின் முதல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. 

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து ராஷ்மிகாவின் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதி போன்ற ஒரு இடத்தில் நடிகை ராஷ்மிகா கையில் கடப்பாறையுடன் நிற்கிறார். 

தனுஷ்

ஆவேசம் கலந்த ஆர்வத்துடன் அங்கு நிலத்தை தோண்டி சூட்கேஸ் ஒன்றை எடுக்கிறார். அதை திறந்து பார்த்தால் முழுக்க பணம் இருப்பதைக் கண்டு அதை தொட்டு கும்பிடுகிறார். சந்தோஷத்துடன் அந்த சூட்கேஸை அந்த இடத்தில் இருந்து இழுத்து செல்லும்படி அந்த கிளிம்ப்ஸ் வீடியோ இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வீடியோவில் வித்தியாசமான காட்சிகளுடன் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web