செம க்யூட்... கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ‘தல’ தோனி!
முழு சாண்டா க்ளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி, மகள் ஷிவா, மனைவி சாக்க்ஷியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.தோனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்களும் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் தோனி தனது மகள் ஜிவா மற்றும் மனைவி சாக்க்ஷியுடன் சாண்டா கிளாஸ் வேடமிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் குடும்பத்தினருடன் நடிகை கிருத்தி சனோனும் கலந்து கொண்டார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படங்களில் , ஷிவா மற்றும் சாக்க்ஷியுடன் தோனி அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே சாண்டே க்ளாஸ் போன்று போஸ் கொடுப்பதைக் காணலாம். கிறிஸ்துமஸ் தீம் படி தோனியின் குடும்பத்தினர் சிவப்பு மற்றும் வெள்ளை உடையில் உள்ளனர். இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சாக்க்ஷி, "கிறிஸ்துமஸ்" என்று தலைப்பிட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
