மாஸ் வீடியோ... ’ தலைவரு அலப்பற’ பாடலுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி!

கிரிக்கெட் ரசிகர்களால ‘தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் எம்.எஸ். தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். எம்.எஸ். தோனியின் 43 வது பிறந்தநாள் இன்று ஜூலை 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
MS Dhoni celebrating his 43rd birthday with Sakshi. ❤️⭐#HappyBirthdayDhoni pic.twitter.com/fC1ExC8mMX
— Johns. (@CricCrazyJohns) July 6, 2024
இந்த வீடியோவில் தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு கேக் ஊட்டிவிட்டு, அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Happy Birthday Kaptaan Sahab!@msdhoni pic.twitter.com/2bjCTNWRil
— Salman Khan (@BeingSalmanKhan) July 6, 2024
எம்.எஸ். தோனிக்கு ரவீந்திர ஜடேஜா,சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், திரை நட்சத்திரங்கள், சக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹுகும் பாடலுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!