வைரல் வீடியோ... தோனி நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் தல ஆக கொண்டாடப்படுபவர் தோனி. இவர் தனது 44-வது பிறந்தநாளை இன்று ஜூலை 7ம் தேதி கொண்டாடுகிறார்.பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட ‘கேப்டன் கூல்’ தோனிக்கு இன்று பிறந்தநாள். அந்த வகையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து MS தோனி கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
MS Dhoni celebrating his 44th Birthday 😍❤️ pic.twitter.com/SYVATE9FUG
— ` (@WorshipDhoni) July 7, 2025
அந்த வீடியோவில், தோனி ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் அணிந்து நண்பர்களுடன் கேக் துண்டுகளைப் பகிர்கிறார். சிரித்துக் கொண்டே கேக் ஊட்டுகிறாற். இதனை கண்டு ரசிகர்கள் அவரது கியூட் மொமண்ட்டுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
You didn’t just lead a team. You led a generation of fans ❤
— Star Sports (@StarSportsIndia) July 6, 2025
From the 2007 T20 WC miracle to 2011’s unforgettable six, thank you for the goosebumps, Mahi. Happy Birthday, @msdhoni!
Watch 7 Shades of Dhoni, Launching 7th July on Star Sports Network & JioHotstar pic.twitter.com/sR3yZno6mJ
இதனிடையே, தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கொண்டாடும் வகையில் ‘7 Shades of Dhoni’ என்ற 7 எபிசோடுகளைக் கொண்ட புரோகிராமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிடுகிறது. இதன் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கம்பீர், ஷேன் வாட்சன் உட்பட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தோனியைப் பற்றி கூறும் கிளிப்ஸ் அதில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
