இறுதி போட்டியில் விளையாடுவதில் தோனிக்கு சிக்கல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர விளையாட்டு வீரருமான தோனி, ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட  தடை விதிக்கப்படலாம் என்று தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஐபிஎல் ப்ளே ஆஃப் தகுதிச் சுற்றின் போது, தோனி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

முதல் சுற்றின் போது பந்துவீச்சாளர், மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை கேப்டன் தோனி, பந்து வீச அழைத்த போது, நடுவர் அனுமதி தர மறுத்து விட்டார். களத்திற்கு வந்த உடனேயே அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என நடுவர் கூறியதற்கு தோனி அதிருப்திக்குள்ளானார். சக அணி வீரர்களும் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பதிரானா வீசினார். 

தோனி

இந்த விவாதங்கள் மைதானத்தில் சுமார் எட்டு நிமிடங்கள் வரை நீடித்தது. பின்பு பதிரானா பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடுவரிடம் விவாதித்ததால், ஐபிஎல் இறுதிப் போட்டியில் டோனிக்கு விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை தோனி கிரிக்கெட்

நடுவர்கள் தோனி குறித்து குற்றம் சாட்டினால், அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக தோனிக்கு ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web