துருவ் ரக ராணுவ ஹெலிகாப்டர் பயன்பாடு நிறுத்தம்!! தொடர் விபத்து எதிரொலி!!

 
துருவ்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்கள் நடப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும் ராணுவ வாகனங்கள் தொடர் விபத்துக்களில் சிக்கி வருவது மக்கள் மனதில் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பல வகையான விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

ஹெலிகாப்டர் விபத்து

இதனையடுத்து ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் அருகே மே 4ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ALH துருவ் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹெலிகாப்டர்
ஒரே மாதத்தில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் சம்பந்தப்பட்ட 2  ஹெலிகாப்டர்கள் விபத்துகள் நடந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 3  முறை விபத்துக்கள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web