ஏலத்திற்கு வரும் டயானாவின் கடிதங்கள்... !

 
டயானா

 இளவரசி டயானா 1997 ல் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக மரணமடைந்தார். இவர் மறைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னும் இவரது விஷயங்கள் ஒவ்வொன்றுமே உலக அளவில் பெரும் வைரலாகி வருகின்றன. டயானா உபயோகப்படுத்திய  பல பொருட்கள் ஏலத்தின் விற்பனை செய்யப்பட்ட   நிலையில் தற்போது அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் ஏலத்திற்கு வருகிறது. அதன்படி அவர் தன்னுடைய முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் ஆகியவை ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதில் டயானா இளவரசர் சார்லஸை திருமணம் செய்த பிறகு எழுதிய கடிதங்களும் அடங்கும்.

டயானா
1982 ல்  செப்டம்பர் மாதம் 8ம் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லஸ் உடன் தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக ஒரு கடிதம் அமைந்துள்ளது.   இதேபோன்று அவர்  முதன் முறையாக கருத்தரித்ததும் தாய்மை உணர்வில் பெற்ற மகிழ்ச்சி, கடந்த 1983 ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடை பெற்ற போது பெற்ற மகிழ்ச்சி போன்ற பல்வேறு விதமான கடிதங்கள் இருக்கிறது. மேலும் இவைகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web